தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்…

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்திய பத்திரிகையாளர்களின் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவருமான “சொல்லின் செல்வர்” திரு. D.S.R. சுபாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.‌

இந்த நிகழ்வில், தன்வந்திரி கேர்& க்யூர் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் தாரா பாலகிருஷ்ணன் அவர்கள் உடலில் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் மருந்துகளை வழங்கி சிறப்பித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக காவல்துறை உதவி ஆணையர் திரு. R. சீரிகாந்த், மெடோ நிர்வாக இயக்குநர் “தர்மபுரி” டாக்டர் G. சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந் நிகழ்வில், திரைப்பட இயக்குனர்கள் திரு. தளபதி, திரு. சி. ரங்கநாதன், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன், ஜீனியஸ் குழுமத்தை சேர்ந்த ” கிங் மேக்கர்” திரு. Ln. B.செல்வம், திரு‌. I. கேசவன், திரு. L. வேலாயுதம், திரு. P.K. மோகனசுந்தரம் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Check Also

தமிழ்நாடு பத்திரிகையாளள் சங்கத்தின் சார்பில் 72 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழா…

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் சார்பில், சென்னை தலைமை அலுவலகத்தில் 26.01.2021 செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில் தேசிய …