தற்கொலைகள் இந்தியாவில்தான் அதிகம்

உலக அளவில் பார்க்கும் போது, இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகம் நடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலையால் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். குறிப்பாக தென் மாநிலங்களில் தான் அதிக அளவில் தற்கொலைகள் நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்கொலைத் தலைநகராக சென்னை மாறி வருகிறது. இளம் வயதினரே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறுகிறார் மனநல மருத்துவர் லட்சுமி.

தற்கொலைகளில், பெரும்பாலானவை குடும்ப பிரச்சனைகளால் நடக்கிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு தற்கொலை எண்ணம் அதிகமாக வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிவோரில் பணிச்சுமையால் 30% பேருக்கு தற்கொலை எண்ணம் உள்ளது. மாணவர்களுக்கு பிடிக்காத படிப்பில் தள்ளப்படும்போதோ அல்லது பாடச்சுமை அதிகமாக இருக்க போதோ தற்கொலை எண்ணம் வருகிறது.

தற்கொலைக்கு முயற்சித்தபின் உயிர் பிழைத்தவர்களில் பெரும்பாலானோருக்கு,  தான் செய்தது பெரிய முட்டாள்தனமான காரியம் என்பதை பின்னர் உணர்வதாகவும் மருத்துவர் தெரிவித்தார். எந்த ஒரு சங்கடமான சூழ்நிலையும் வாழ்க்கையின் முடிவு அல்ல. தற்கொலை அதற்கு தீர்வும் அல்ல.

Check Also

ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி …