திரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களது பிறந்த நாள் அறிவியல் கண்காட்சி 2019

மறைந்த குடியரசு தலைவர் திரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களது பிறந்த நாளை (15.10.19, செவ்வாய்) முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையே மாபெரும் அறிவியல் கண்காட்சி 2019, ” யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” ” போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி, லயன்ஸ் கிளப் ஆஃப் இராயபுரம் ஹெரிடேஜ், தீஷா இயற்கை ஆகியோர் இணைந்து இராயபுரம், செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடத்தினார்கள்.

முதல் நிகழ்வாக, காலை 9 மணியளவில் , Rev. Bro.J. ஆரோக்கியசாமி பிரபு அவர்கள் (Bursar, St Peter’s Hr. Sec.School) தலைமையுரை ஆற்ற, திரு. பிரான்சிஸ் சேவியர் அவர்கள் (Science Teacher) வரவேற்புரையாற்ற, ” யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை நிறுவனர் & தலைவர் திரு. பூபதி. கார்த்திகேயன் அவர்கள் குத்து விளக்கேற்றி கண்காட்சியினை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அறிவியல் கண்காட்சிக்காக பல்வேறு பள்ளிகளிலிருந்தும் வருகை தந்த மாணவர்கள் அதற்கான அரங்கினுள் அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டாம் நிகழ்வில் பிற்பகல் 12.30 மணியளவில் சிறப்பு விருந்தினர்கள் திரு. D.S.R. சுபாஷ் அவர்கள் (மாநில தலைவர் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்), திரு. PMJF Lion . B. சத்தியநாராயணமூர்த்தி, அவர்கள்(அரிமா மாவட்ட ஆளுநர்324-A5), “நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் (மாநில தலைவர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்), “செயல் சிங்கம்” திரு. Lion C. பாலகிருஷ்ணன் அவர்கள்( மாநில பொதுச் செயலாளர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்), திரு. B. வெங்கடேசன் அவர்கள் ( மாநில பொருளாளர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்), திரு Lion அருள்ரபி அவர்கள் ( Region Chairman 324-A5), திரு. Lion C.H. சண்முகம் அவர்கள் (President, Lions Club of Royapuram Heritage), திரு. ” மெட்ரோமேன்” S. அன்பு( நிறுவனர்&ஆசிரியர் மெட்ரோமேன் மாத இதழ்), மாநில செயற்குழு உறுப்பினர் திரு. B. செல்வம்( நிறுவனர்&ஆசிரியர், ” எங்கள் கிங்மேக்கர்”) ஆகியோர் அறிவியல் கண்காட்சியினை பார்வையிட, மாணவர்கள் தங்கள் செய்முறைகளை விளக்கிக் காட்டினர். இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் அறக்கட்டளை சார்பாக கெளரவிக்கப்பட்டனர்.

மூன்றாம் நிகழ்வாக சிறப்பு விருந்தினராக வருகைத் தந்த திரு. Srikanth Kumar அவர்கள் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி வாரியாக வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தார். இறுதியில், தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கி சிறப்பித்தார்.

கண்காட்சி சிறப்பாக நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் பள்ளி சார்பில் நன்றி தெரிவித்தனர்

செய்தியாக்கம்&ஒளிப்பதிவு: ” ஜீனியஸ்” K.சங்கர்

Check Also

இரயில் பயணிகளின் நலன் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் காவல் அதிகாரி….

பரபரப்புக்கு பஞ்சமில்லாத சென்னை எம். ஜி. ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  மைக்கே இல்லாமல் தன்னை சுற்றியுள்ள கூட்டத்தின் முன் …