தென்கொரிய கப்பல் விபத்து பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு

தென் கொரியாவில் ஏப்ரல் 15-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நிகழ்ந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

தென் கொரியாவின் சியோல் அருகே உள்ள இன்சியோன் துறைமுகத்திலிருந்து 450க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட கப்பல் திடீரென மூழ்கியது. அவசர உதவி கோரி கப்பலில் இருந்து வெளியான சமிக்ஞையை பார்த்து மீட்புக்குழுவினர் விரைந்தனர். அதற்குள் கப்பல் பாதியளவு மூழ்கிவிட்டது.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இதுவரை 157 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 145 பேரை காணவில்லை. பெரும்பாலான உடல்கள் கப்பலின் நான்காம் தளத்தில் உள்ள படுக்கையறையிலிருந்து கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

கப்பலின் மூன்றாம் தளத்தில் உள்ள கேஃப்டீரியாவிலிருந்து காணாமல் போனவர்களின் உடல்கள் கிடைக்க கூடும் என மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக தென் கொரிய கப்பல் படையை சேர்ந்தவர் கூறியுள்ளார்.

Check Also

கண்டெய்னர் லாரி விபத்து, வாலிபர் கால் முறிவு…

19-06-19 காலை 11 மணியளவில் இராயபுரம் கிழக்கு கல்மண்டபம் சாலையிலிருந்து, சூரியநாராயண செட்டி தெருவிற்கு திரும்ப வேகமாக வந்த கண்டெய்னர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *