தேர்தல் அறிக்கையிலும் ” நீயா… நானா…”


✒️✒️✒️✒️✒️✒️
தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ந் தேதி நடைபெறவுள்ளது.
இத் தேர்தலில் யார் ஜெயிப்பது என்பதை விட தேர்தல் அறிக்கைகளை தருவதில் இரு திராவிட கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை சகட்டு மேனிக்கு அளித்துள்ளன.
ஆளுங்கட்சியாக இருந்தவரை எவ்வித முன்னேற்றத்திலும் மக்கள் பயன்பெறவில்லையென்பது அள்ளி தெளித்த நலத்திட்ட உதவிகளே சாட்சியமாகும். அதோடு அரசின் நிதி நிலைமை மோசமே என்ன தெள்ளத் தெளிவாக அறிக்கையும் விட்டு தமிழக மக்கள் கடனாளி தான் என சொல்லியாச்சு. இதன் பிறகு மக்களை ஏமாற்றும் வகையில் அள்ளி விடும் வாக்குறுதிகள் எப்படி நிறைவேற்ற முடியும்.?
ஒருவேளை நாம் வராவிட்டால் வருபவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிற அலட்சியமா… லட்சியமா…


இது போதாதது என சொல்லும் வண்ணம் எதிர் அணியில் இருப்பவர்களும் நாங்க மட்டும் சளைத்தவர்களா என்ன என்று தங்கள் இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை அள்ளி விட்டதை பார்க்கிற போது, ஏற்கனவே இவர்கள் தேர்வில் உள்ள வேட்பாளர்களிடம் ” நீங்க எம்புட்டு செலவு செய்வீங்க. நமக்கு எப்பூடின்னு ” தான் கேள்வி கேட்டு பதிலையும் பெற்று ( ஐயா நா 10 கோடி மேலேயும் செலவு செய்ய ரெடி. சீட் தந்தா பீட் பண்ணிடுவேன் என்ற ரேஞ்சிலே இருக்கின்றார்களே) தடலாடி சீட் தந்து இதோ வேட்பு மனு தாக்கலுக்கு பந்தாவாக தங்கள் படையோடு புறப்பட்டு விட்டனர். அப்புறம் தங்கள் தொகுதியில் வீதி வீதியாக நேரம் குறைவு என்பதால் வீடு வீடாக போய் காலில் விழாமல் ஜீப்பிலே பிரச்சாரம் ஆரம்பிக்கவுள்ளனர்.
நம் மக்களும் இவர்களால் நமக்கு ஒளிமையமான எதிர்காலம் தான் எண்ணி ஆரத்தி எடுக்க, அவர்களோ ஒரு சேஞ்சுக்கு காலில் விழுவது போல பாசாங்கு செய்ய, இரண்டாவது அலை கொரோனாவே பயந்து ஓடி வண்ணம் தங்கள் அலப்பரை பந்தாக்களை தங்கள் படையுடன் வர துவங்கி விட்டனரே.
எது எப்படியோ தமிழக மக்கள் மீண்டுமொரு முறை ஏமாற தயாராகி விட்டனர் என்பதே நூறு சதவிதம் உண்மை.
செய்தியாக்கம்:
” கிங்மேக்கர்” Ln B.செல்வம்
🙏🤝🙏🤝🙏🤝🙏

Check Also

தர்காவில் கார்த்திகை தீபம்!….

மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கானுார் குளத்தை …