தொடரும் PPFA வின் மக்கள் நலப்பணி…

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் மக்களுக்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு MJF Ln Dr. லி பரமேஸ்வரன் அவர்கள் தலைமையில் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், இன்று 11.06.2021 வெள்ளிக்கிழமை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை பொதுச்செயலாளரும், அரிமா சங்கத்தின் மண்டல தலைவருமான திரு. MJF Ln N. சரவணன் அவர்களது பிறந்தநாளையொட்டி, வியாசர்பாடி, கன்னிகாபுரம் பகுதி வாழ் மக்களுக்கு (300 நபர்களுக்கு) மதிய உணவு பிற்பகல் 1 மணியளவில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி உதவி நிர்வாக ஆசிரியருமான திரு. PMJF Ln Dr M .நாகராஜ், திரு. MJF Ln அகில் மணி, திரு.Ln ராஜ்குமார் , திரு. MJF Ln A. வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

PPFA சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்திற்காக திரு. MJF Ln N.சரவணன் அவர்கள் ரூ. 3,750/ ஐ தந்து உதவியுள்ளதற்கு PPFA சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Check Also

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பசியால் வாடிய மக்களுக்கு உண‌வு வழங்கப் பட்டது….

சென்னை, புயல் சீற்றத்தால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால், உணவின்றி தவித்த மக்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை …