தொடர் களப்பணியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்…

சென்னையில் அண்மையில்  பெய்த பெரு மழையால் உணவின்றி தவித்த மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு, உடை போன்ற உதவிகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளருமான “நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது தலைமையில், 17.11.2021 புதன்கிழமையன்று மதியம் 1 மணியளவில், சுமார் 200 நபர்களுக்கு சென்னை, வியாசர்பாடி, கன்னிகாபுரத்தில் உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக, திரு வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. E. ரவிச்சந்திரன் அவர்கள் கலந்துக் கொண்டார். அவ்வமயம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும், திராவிட முன்னேற்ற கழகம், 40 வட்ட செயலாளருமான திரு. M.A. ராஜசேகர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரயரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் வடசென்னை மாவட்ட துணை செயலாளருமான “கிங்மேக்கர்” திரு. Ln B. செல்வம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு. L. வேலாயுதம், மாஸ்டர் சந்தோஷ் கண்ணா ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

 

Check Also

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பசியால் வாடிய மக்களுக்கு உண‌வு வழங்கப் பட்டது….

சென்னை, புயல் சீற்றத்தால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால், உணவின்றி தவித்த மக்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை …