தொழில் முதலீடு செய்ய சிறந்த மாநிலம் குஜராத், தமிழகத்திற்கு 12 ம் இடம்

இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்குவதற்கும், வர்த்தகம் மேற்கொள்வதற்கும் உகந்த மாநிலங்களில் முதல் இடத்தில் குஜராத் உள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொழில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலங்களை தரவரிசைப்படுத்தும் வகையிலான ஆய்வை மேற்கொள்ளுமாறு உலக வங்கிக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், அந்த ஆய்வை உலக வங்கி மேற்கொண்டது.

அந்த ஆய்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி, தொழில் தொடங்க சாதகமான சூழல் உள்ள மாநிலங்களில் குஜராத் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆந்திரம் இரண்டாவது இடத்திலும், ஜார்க்கண்ட் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஸா, மகாராஷ்டிரம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன.

மேற்கு வங்கத்துக்கு 11-ஆவது இடமும், தமிழகத்துக்கு 12-ஆவது இடமும் கிடைத்துள்ளது.

StateState Score
Gujarat71.14%
Andhra Pradesh70.12%
Jharkhand63.09%
Chhattisgarh62.45%
Madhya Pradesh62.00%
Rajasthan61.04%
Odisha52.12%
Maharashtra49.43%
Karnataka48.50%
Uttar Pradesh47.37%
West Bengal46.90%
Tamil Nadu44.58%
Telangana42.45%
Haryana40.66%
Delhi37.35%
Punjab36.73%
Himachal Pradesh23.95%
Kerala22.87%
Goa21.74%
Puducherry17.72%
Bihar16.41%
Assam14.84%
Uttarakhand13.36%
Chandigarh10.04%
Andaman and Nicobar Islands9.73%
Tripura9.29%
Sikkim7.23%
Mizoram6.37%
Jammu and Kashmir5.93%
Meghalaya4.38%
Nagaland3.41%
Arunachal Pradesh1.23%

Check Also

தமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு

வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், …