நகைச்சுவை நடிகர் இராயபுரம் விஜயம்…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 48 ஆம் நாள் மண்டல பூஜை 13.04.2021 செவ்வாய் கிழமை காலை 5 மணியளவில் யாகசாலை பூஜையுடன் தொடங்கி, தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் என கோலகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்த்திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு. ” போண்டா”  மணி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான ” நட்பின் மகுடம்” திரு. லி.MJF  Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது இல்லத்திற்கு வருகைத் தந்தார்.

தமிழ் திரையுலகில் ஆரம்ப நாட்களில் நுழைவதற்கு தடுமாறி வந்த வேளையில்  பெருமளவில் எனக்கு உறுதணையாக இருந்தவர் அன்பு சகோதரர் திரு. பரமேஸ்வரன் அவர்கள் என்பதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் இதனை தொடர்ந்து இருவரும்  அம்மனை தரிசனம் செய்ய சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆலய குருக்கள்  திரு. நேதாஜி அம்மனின் பாதத்தில் வைக்கப்பட்ட மாலையினை அணிவித்து கெளரவித்தார்.

இந்த சிறப்பு மிக்க நிகழ்வினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியரும், ஆலய பொதுக்குழு உறுப்பினருமான “கிங்மேக்கர்” திரு. Ln B  செல்வம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில மகளிர் அணி இணை செயலாளர் திருமதி செல்வமோகனா ஆகியோர் முன்னின்று ஏற்பாடுகளை செய்திருந்திருந்தனர்.

நடிகர் ” போண்டா” மணி அவர்கள் குழந்தைகள் மீது அளவில்லா பாசம் கொண்டவர். ஆதலால் நமது மாநில துணை செயலாளர் அவர்களது புதல்வர்கள் செல்வன் தனுஷ்கண்ணா, செல்வன் சந்தோஷ் கண்ணா ஆகியோருடன் விளையாடிய படி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாக்கம்: “ஜீனியஸ்” கே. சங்கர்

Check Also

வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….

சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை …