நசரத் செக்போஸ்ட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்.. காவல்துறை அதிரடி…

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு‌ A.K. விஸ்வநாதன் அவர்களின் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர் திரு. தினகரன், இணை ஆணையாளர் திருமதி விஜயகுமாரி, துணை ஆணையர் திரு. ஈஸ்வரன், உதவி ஆணையர் திரு செம்பேடு பாபு ஆகியோரின் வழிக்காட்டுதலின்படி T16 நசரத் காவல் நிலைய செக்போஸ்ட்டில், T5 திருவேற்காடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு‌ S. முருகேசன் அவர்கள் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திரு சேது, தலைமை காவலர்கள் திரு சுரேஷ், திரு மதன், மகளிர் தலைமை காவலர் திருமதி பானுஜோதி, திருமதி பாக்யா சாந்தி பிரசன்யா ஆகியோர் கொண்ட குழு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் 400 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதனை கடத்தி வந்த இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்ட திரு. முருகேசன் குழுவினரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

Check Also

வட சென்னையில், சென்னை மாநகர போலிஸ் கமிஷ்னர் ஏ.கே. விஸ்வநாதன் திடீர் விசிட்

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதில் ராயபுரம், தண்டையார்ப்பேட்டை, திருவொற்றியூர் பகுதிகளில் எண்ணிக்கை எகிறி …