நடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் பலி

சுலோவாக்கியா நாட்டில் நடுவானில் இரு விமானங்கள் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

சுலோவாக்கிய நாட்டு விமானம் மேற்கு மாகாணத்தில் 40 பாராசூட் வீரர்களுடன் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது செக்குடியரசு நாட்டின் எல்லையில் கெமன் என்ற பகுதியில் நடுவானில் 1500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக L-410 டிவின் இன்ஜின் விமானத்துடன் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த சில வீரர்கள் பாராசூட் உதவியுடன் கீழே குதித்துத் தப்பினர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Check Also

கண்டெய்னர் லாரி விபத்து, வாலிபர் கால் முறிவு…

19-06-19 காலை 11 மணியளவில் இராயபுரம் கிழக்கு கல்மண்டபம் சாலையிலிருந்து, சூரியநாராயண செட்டி தெருவிற்கு திரும்ப வேகமாக வந்த கண்டெய்னர் …