நமது வ(வி)ழிக்காட்டிக்கு 75 ஆம் பிறந்த நாள்!

பத்திரிகையாளர் என்பவர் சாதராணமானவர்கள் அல்ல, அவர்கள் இந்த ஜனநாயக நாட்டின் நான்கு தூண்களில் முக்கிய தூணாக மக்களோடு பழகி அவர்களுக்கு வழிக்காட்டியாய் நம் பயணத்தினை நடத்திட வேண்டும் என்பதை நமக்கெல்லாம் தெளிவுற எடுத்துரைத்து மறைந்தும், நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் மாமனிதர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தை நிறுவி, பத்திரிகையாளர் வாழ்வும் சிறப்பாக அமைந்திட வேண்டும் என்பதில் துணிச்சலாக தன் எண்ணங்களை பகிர்ந்தே வாழ்ந்து காட்டிய “பத்திரிகை போராளி” ஐயா திரு. டி.எஸ் ரவீந்திரதாஸ் அவர்களுக்கு இன்று ( 20.11.2020 வெள்ளிக்கிழமை) 75 ஆவது பிறந்தநாள்.

நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழினை கடந்த 08.08.2010 ஆம் ஆண்டில் சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற வண்ணமிகு விழாதனில் ஐயாவின் திருக்கரங்களால் துவக்கிய நாளை இன்றும் மறக்க இயலாது.

அவர்களது ஆசிகளோடு 11 ஆம் ஆண்டில் வெற்றிக்கரமாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றோம் என்பதை இத் தருணத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக் கொள்வதில் பெருமையடைகின்றோம்.

இந்நாளில் ஐயாவின் கனவான பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு, நல வாரியம் போன்ற பத்திரிகையாளராகளுக்கு பயன் தரக்கூடிய நலத்திட்டங்களை முன்னிறுத்தி, இவற்றினை நிறைவேற்ற மாநில அரசிற்கு தலையாய வேண்டுகோளாக வைத்திடுவோம்.

இதற்காக தந்தையின் வழியில் அவரது பணியினை தன் தோள் மீது சுமந்து பம்பரமாக சுழன்று வரும் இந்திய ஜர்னலிஸ்ட் தேசிய செயலாளரும், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் மாநில தலைவருமான திரு. D.S.R. சுபாஷ் அவர்கள் தலைமையில், நமது சங்கம் 30ஆம் ஆண்டில் வீறு நடைபோட்டு வர, ஐயாவின் பிறந்த நாளாம் இந்நன்னாளில் உறுதிமொழி ஏற்போம்.

“நமது ஒற்றுமை…நமது உரிமை…” ஒருங்கிணைவோம்…! என்றும் உங்களுடன்…

“நட்பின் மகுடம்”

திரு MJF Ln Dr லி பரமேஸ்வரன்
மாநில தலைவர்,
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்
முதன்மை ஆசிரியர்
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ்
தலைவர், ஜீனியஸ் டீவி
மாநில அமைப்புச் செயலாளர், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்
மாநில செய்தி தொடர்பாளர்,
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக்,மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கம்

Check Also

பத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…

தமிழக பத்திரிகையாளர்களின் வ(வி)ழிக் காட்டியாய் வாழ்ந்து மறைந்தாலும், இன்றும் பத்திரிகையாளர்கள் என்றாலே ஐயா டி.எஸ். ரவீந்திரதாஸ் என ஒவ்வொரு பத்திரிகையாளரும் …