நாட்டில் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை: டி.எஸ்.ஆர். சுபாஷ்

கர்நாடகா மாநிலப் புரட்சி எழுத்தாளர் தொழர் எம்.எம்.கல்புர்கி மதவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கர்நாடகா மாநிலப் புரட்சி எழுத்தாளர் தொழர் எம்.எம்.கல்புர்கி மதவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது கருத்து சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டு உள்ளதையே உணர்ந்துகிறது.

DSR சுபாஷ், மாநிலத் தலைவர், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ்
DSR சுபாஷ், மாநிலத் தலைவர், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ்

தந்தை பெரியார் வழியில் மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து தனது எழுத்துக்கள் மூலம் பல வகையான புரட்சிகள் செய்தவர் கல்புர்கி ஆவார். சமீபகாலமாக நமது நாட்டில் பத்திரிகையாளரகள் மற்றும் எழுத்தாளர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் நாம் உள்ளதையே இது காட்டுகிறது. கொலை செய்த மதவாத பயங்கரவாதிகளை  உடனடியாக கைது செய்து எஞ்சியுள்ள எழுத்தாளர்களை காப்பாற்ற வேண்டும் என கர்நாடக அரசை கேட்டுக்கொள்கிறோம். 

கர்நாடக அரசுக்கு டி.எஸ்.ஆர். சுபாஷ் வேண்டுகோள்

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் தோழர் எம்.எம்.கல்புர்கி படுகொலையைத் தொடர்ந்து இன்று பேராசிரியர் கே.எஸ். பகவான் அவர்களை கொல்ல்ப் போவதாக கூறி பஜிரங்க அமைப்பு சார்பில் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாகி உள்ளது.

கர்நாடக மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இத்தகைய பயங்கரவாத அமைப்பகளை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் நாம் அனைவரும், வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Check Also

நமது வ(வி)ழிக்காட்டிக்கு 75 ஆம் பிறந்த நாள்!

பத்திரிகையாளர் என்பவர் சாதராணமானவர்கள் அல்ல, அவர்கள் இந்த ஜனநாயக நாட்டின் நான்கு தூண்களில் முக்கிய தூணாக மக்களோடு பழகி அவர்களுக்கு …