நீலகிரி பாஜக வேட்பாளர் குருமூர்த்தி மனு சென்னை ஹைகோர்ட்டில் தள்ளுபடி

நீலகிரி தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து பாஜக வேட்பாளர் குருமூர்த்தி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. நீலகிரி தொகுதியில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக குருமூர்த்தி அறிவிக்கப்பட்டார். அவர் வேட்பும னுவை தாக்கல் செய்த போது கட்சியின் கடிதத்தை இணைக்கவில்லை. அதேபோல் பாஜகவின் மாற்று வேட்பாளரும் தமது மனுவில் இணைக்கவில்லை.

இதனால் குருமூர்த்தி மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குருமூர்த்தி நேற்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் முறையிட்டிருந்தார். ஆனால் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் நேற்று மறுத்த நிலையில் இன்று அவரது மனு விசாரணைக்கு வந்தது. ஆனால் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்துவிட்டதால் குருமூர்த்தி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

Check Also

எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அதிரடி.. மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு‌.‌..

சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வெங்கடேச கிராமிணி தெருவில் இயங்கி வந்த டாஸ்மாக் மூலம் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர்‌. இந்நிலையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *