நெட் தேர்வு: டிசம்பர், 28ம் தேதி நடைபெறும்: CBSE

‘நெட்’ (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் CBSE (சிபிஎஸ்இ) டிசம்பர் 28ம் தேதி நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுவரை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நடத்தி வந்த இந்தத் தேர்வை, முதல்முறையாக 2014 டிசம்பரில் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இனி ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ.தான் நடத்தவுள்ளது.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சி பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் நெட் தேர்வு நடத்தப்படுகிறது.

நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்துக்கு:

நவம்பர் 15 ம் தேதி வரை விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

• சின்டிகெட் வங்கி, கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி மூலம் விண்ணப்ப கட்டணத்தைச் செலுத்த நவம்பர் 18 கடைசி நாளாகும்.

• ஆன்லைன் விண்ணப்பத்தை நகல் பெற நவம்பர் 28 கடைசி நாளாகும்.

• பிரதி எடுத்த விண்ணப்பத்தைச் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு மையத்தில் சமர்ப்பிக்க நவம்பர் 25 கடைசி தேதியாகும்.

Important Dates
Online Form Submission15th October, 2014 to 15thNovember, 2014
Last date for Applying Online & generation of filled Bank Challan for Fee.15th November, 2014
Last date of submission of Fee through online generated Bank Challan, at any branch of (SYNDICATE/CANARA/ICICI BANK)18th November, 2014
Last date of taking printout of Application Form, Attendance Slip and Admit Card from website19th November, 2014
Last date for receiving the printout of online Application Form (one copy) and Attendance Slip (one copy) at the respective Coordinating Institution opted by the candidate (with fee receipt & category certificate(s)25th November, 2014

கூடுதல் தகவல்களுக்கு சிபிஎஸ்இ இணையதளத்தை பார்க்கலாம். http://cbsenet.nic.in/cbsenet/Welcome.aspx

Check Also

மருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – உயர்நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுகளில், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்கள் தொடர்பாக மத்திய அரசு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *