படித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…

தமிழகத்தில் வருகின்ற 06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,  வடசென்னை மாவட்டம் சார்பில், “தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்” வாக்காளர்களிடையே அளிக்கவுள்ளோம். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என இராயபுரம் சரகம்  N1 இராயபுரம் காவல் நிலையத்தில், உதவி ஆணையாளர் திரு.C.சீனிவாசன் அவர்களை  நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம். நமது இந்த பணி மிகவும் சிறப்பு என பாராட்டினார்.

தொடர்ந்து நம்மிடம் பேசுகையில், 100 சதவீதம் ஓட்டளிப்பு முக்கியமே. கிராமத்து மக்களுக்கு கூட ஓட்டு போடணும்ன்னு ஆர்வம் இருக்கு. ஆனா படித்தவர்கள் ஏனோ இதில் ஆர்வமில்லாமல் இருப்பதால் தான் நாம் நினைக்கும் இலக்கை அடைய முடியவில்லை என்றவர், நமது சிறப்பான  நிகழ்வுக்கு வர முயற்சிப்பதாகவும் உங்கள் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.     

தொடர்ந்து, இராயபுரம் தேர்தல் அலுவல் அதிகாரி செல்வி பேபி அவர்களை சந்தித்து நமது தேர்தல் விழிப்புணர்வு பிரசுரம் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அழைப்பு விடுத்தோம். பல்வேறு தொடர்ச்சியான தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கான பயிற்சியில்  இருந்தவர் “நீங்களே பார்க்கிறீர்கள். காலமும், நேரமும் குறைவு. வேலை பளு அதிகம் இருந்தாலும் நேரம் கிடைத்தால் கலந்துக் கொள்வதாக தெரிவித்தார். 

   

படமும், செய்தியும்: “கிங்மேக்கர்” Ln B.செல்வம்

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …