பரதநாட்டிய அரங்கேற்றம்…

சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் பணிபுரியும் திரு. P.ஜானகிராமன் அவர்களின் புதல்வி P.J. நிவேதா மற்றும் திரு.V. நம்பிராஜன் அவர்களின் புதல்வி V.N.ஜேஸ்வினி ஆகியோரது நடன அரங்கேற்றம், சென்னை, ராணி சீதை ஹாலில், 12.09.2021, ஞாயிறு அன்று முதன்மை சிறப்பு விருந்தினர் “கலைமாமணி” திரு. “குத்தாலம்” M.செல்வம் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

R.S. பாரத நாட்டியாலயா மாணவிகளான இருவரும், இந்த நிறுவனத்தின் தலைவர் திருமதி பார்வதி மோகன் அவர்களிடம் நடனம் பயின்றது மட்டுமல்லாமல், அவர்களது மேற்பார்வையில் தங்களது முதல் நடன நிகழ்வினை அரங்கேற்றியுள்ளனர்.