பரதேசி சிறந்த திரைப்படமாக நார்வே திரைப்பட விழாவில் தேர்வு

நார்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

2013-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் சிறந்த படமாக பாலா இயக்கிய பரதேசி படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் –  ‘பரதேசி’ படத்தில் நடித்த அதர்வா

சிறந்த நடிகை – ‘விடியும் முன்’ படத்திற்காக பூஜா.

சிறந்த இயக்குனர் – பாலா

சிறந்த ஒளிப்பதிவாளர் –  செழியனும்

சிறந்த நகைச்சுவை நடிகர் – சூரி

சிறந்த இசையமைப்பாளர் –  கடல் ‘மரியான்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வாழ்நாள் சாதனையாளர் விருது ஆச்சி மனோரமாவிற்கு வழங்கப்படுகிறது.

இயக்குனர் பாலுமகேந்திரா நினைவு விருது ‘ஹரிதாஸ்’ படத்திற்கு வழங்கப்படுகிறது.

கே.எஸ்.பாலச்சந்திரன் நினைவு விருது ‘ராஜா ராணி’ படத்திற்கு வழங்கப்படுகிறது.

வரும் ஏப்ரல் 27-ந் தேதி  விருதுகள் வழங்கும் விழா நார்வேயின் தலைநகரமான ஓஸ்லோவில் நடக்கவுள்ளது.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *