பாயும் புலி படம் நாளை வெளியாகிறது

பாயும் புலி உள்ளிட்ட அனைத்து படங்களும் 4-ம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.

திட்டமிடப்பட்டபடி பாயும் புலி படம் நாளை வெளியாகும். எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்தன என்று நடிகர் விஷால், இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரும்அறிவித்துள்ளார்கள்.

விஷால், காஜல் அகர்வால் நடித்த ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பான பிரச்னையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படாததால் வெள்ளிக்கிழமை முதல் படங்களை வெளியிடப் போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.

இதனால் மிகவும் வருத்தமடைந்த விஷால், பிரச்னையை ஏன் கடைசி நேரத்தில் கொண்டுவருகிறார்கள்? அதற்குப் பதிலாக ஒரு மாதத்துக்கு முன்பே இதைச் சரி செய்திருக்கலாம் அல்லவா? இச்செயல் முறையற்றது. ஒரு விநியோகஸ்தருக்காகவும் சில திரையரங்குகளுக்காகவும் ஏன் படத்தை நிறுத்தவேண்டும் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இன்று பாயும் புலி படம் பிரச்னை தொடர்பாக மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதனையடுத்து விஷாலும் இயக்குநர் சுசீந்திரனும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதாவது:

பிரச்னைகள் தீர்ந்தன. பாயும் புலி நாளை வெளியாகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவிய சங்கங்களுக்கு நன்றி என்று கூறியுள்ளனர்.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …