பிஜேபி வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம்…

பாரதிய ஜனதா வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம் கப்பல் போலு செட்டித் தெருவில் 25.09.2020 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. M. கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையேற்று கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் இளைஞர் அணி சார்பாக நடை பாதை வியாபாரிகளுக்கு வங்கி கடன் நலத் திட்டம், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மருத்துவ காப்பீடு திட்டம், ஜன்தன் வங்கி கணக்கு நலத் திட்டம் ஆகியன பொதுமக்களுக்காக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் திரு. S. செல்வநாதன், திரு. S. வன்னியராஜன், திரு. த. ஜெய்கணேஷ், மாவட்ட பொருளாளர் திரு. G. சதாசிவம், வட சென்னை மாவட்ட கிழக்கு இளைஞர் அணி தலைவர் திரு. L. தியாகராஜன், இராயபுரம் மத்திய மண்டல தலைவர் திரு. S. ரூப்சந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் திரு. ரஜித்குமார் சிறப்பான முறையில் செய்திருந்தார். இவருக்கு உறுதுணையாக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் திரு.V மணி, இளைஞர் அணி மாவட்ட மத்திய மண்டல தலைவர், திரு. சு.காமேஷ்வரன், இளைஞர் அணி கிழக்கு மண்டல தலைவர் திரு. கார்த்திக், இளைஞர் அணி மேற்கு மண்டல தலைவர் திரு. செந்தில் ஆகியோர் பங்களித்தனர்

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:
” கிங்மேக்கர்” B. செல்வம்
🙏🙏🙏🙏🙏🙏🙏

Check Also

வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….

சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை …