பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் முழு பங்களிப்பில் 17.04.2022, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், ஆவடி, முருகப்பா பாலிடெக்னிக் பேருந்து நிலையம் அருகே, நடைபெற்றது.

இந் நிகழ்வில்,சிறப்பு அழைப்பாளராக, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு தனது திருக்கரங்களால் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந் நிகழ்வில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில கண்காணிப்பு குழு தலைவரும், மெட்ரோமேன் மாத இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியருமான திரு. S. அன்பு, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில கண்காணிப்பு குழு செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான திரு. P.K. மோகனசுந்தரம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தலைமை நிலைய செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு ” ஜீனியஸ்” K. சங்கர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு. L. வேலாயுதம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு. B.லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தலைவர் திரு. S. பாக்கியராஜ், செயலாளர் திரு. M. தினகரன், இணை செயலாளர் திரு. S. ஜெயக்குமார், துணை செயலாளர் திரு. K. குமார், அமைப்பு செயலாளர் திரு. M. உதயகுமார், இளைஞரணி செயலாளர் திரு. K. ராஜி, அம்பத்தூர் தொகுதி தலைவர் திரு. E. லட்சுமி காந்தன், தமிழ்நாடு மின் ஒப்பந்ததாரர்கள், மின் இணைப்பாளர்கள் மத்திய சங்கம் திருவள்ளூர் மாவட்டத்தின் தலைவர் திரு. R. செல்வம் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு தர்ப்பூசணி, இளநீர், நீர்மோர் வழங்கி சிறப்பித்தனர்.

செய்தி தொகுப்பு , ஒளிப்பதிவு

“ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா…

சென்னை, இராயபுரம் கல்மண்டபம், அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 01.03.2022 செவ்வாய் கிழமை தொடங்கியது. 02.03.2022 புதன்கிழமை அமாவசையன்று …