பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிமுக எம்.பிக்கள் சந்திப்பு

பிரதமர் மோடியை டெல்லியில் இன்று அதிமுக எம்.பிக்கள் 48 பேர் நேரில் சந்தித்து என்.எல்.சி தொழிலாளர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி  கடந்த மாதம் 20ந்தேதி முதல் என்.எல்.சி நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சினையில்  நேரடியாக தலையிட்டு தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு 2 முறை கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் அதிமுக மக்களவை எம்.பி.க்கள் 37 பேர் மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேர் என மொத்தம் 48 எம்.பிக்கள் பிரதமர் மோடியை டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது என்.எல்.சி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

என்.எல்.சி தொழிலாளர்களுக்கு தகுந்த ஊதிய உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு நிலக்கரித்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட பிரதமர் மோடியை அவர்கள் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Check Also

சென்னையில்‌ பாரத பிரதமர்…

சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார்.சென்னை விம்கோநகர்- வண்ணாராப்பேட்டை மெட்ரோ ரயில் …