பீகார் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகளை பங்கிட்டு கொள்வதில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 12-ந் தேதி முதல்  நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிகள் தலா 100 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

அதே நேரத்தில், பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, மாஞ்சியின் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ஆகிய கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக உடன்பாடு எட்டப்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைவர் அமித் ஷாவை, ஜிதன் ராம் மாஞ்சி இன்று சந்தித்து பேசினார். இதில் தொகுதி பங்கீடு செய்வதில் உடன்பாடு எட்டப்பட்டது.

எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து இன்று பிற்பகல் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Check Also

️டியூஜே வின் தேர்தல் விழிப்புணர்வு…

ஏப்ரல் 6 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. அவர்களது தேர்தல் …