புதுச்சேரி காவல் நிலையத்தில் கைதி மர்ம மரணம்: 5 போலீசார் சஸ்பெண்டு

புதுச்சேரி, வில்லியனுர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஒருவர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியை அடுத்த ஜி.என். பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவி என்கிற முத்துக்குமரன். வெட்டியான் வேலை செய்து வந்த இவரை, திருட்டு வழக்கு ஒன்றில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வில்லியனூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முத்துகுமரன் நேற்றிரவு காவல்நிலையத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.இது குறித்து தகவலறிந்து வந்த உறவினர்கள் வில்லியனூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, முத்துக்குமரனை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அடித்துக்கொன்றதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அன்று காவலில் ஈடுபட்டிருந்த 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கைதியின் திடீர் மரணம் குறித்து போலீசார் திவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Check Also

டெல்லி திகார் ஜெயிலில் தொடரும் கைதிகளின் மர்ம மரணம்

கடந்த சில வாரங்களில் நடந்துள்ள மர்மமான இறப்புகளை அடுத்து திகார் சிறையில் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து இது குறித்து …