பொதுப்பணித்துறை செய்ய வேண்டிய பணி… சென்னை பெருநகர மாநகராட்சி செய்து வருகிறது.?

சென்னை, யானைக்கவுனி பகுதியில் கூவம் ஆற்றுப் பகுதியில் குவிந்து கிடைந்த குப்பைக்கூளங்களை சீர்படுத்தி தர வேண்டிய பொதுப்பணித்துறை கண்டும் காணாமல் விட்டு விட்டது.

இதனால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்த சென்னை பெருநகர மாநகராட்சி ஊழியர்களே களத்தில் இறங்கி கடந்த ஒரு வாரமாக துரிதமாக சுத்தம் செய்து வருகின்றனர்.
இதில் வேதனையான விஷயம் சுத்தம் செய்ய பணியாளர்களை அமர்த்தியவர்கள் அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்காமல் இருப்பது தான்.

ஏற்கனவே கொரோனா நோய் பரவலால் அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்த நிலையில் சுகாதாராத்தை கடைபிடிக்க வேண்டிய மாநகராட்சியே தன் ஊழியர்கள் நலனில் அலட்சியமாக நடந்து வருவதும், இதனை பொருட்படுத்தமால் தங்கள் பணியில் ஈடுபட்டு வருவதும் தான் குறிப்பிடத்தக்கது.