பொதுமக்களின் வசதிக்காக கட்டணமில்லா கழிவறை திறப்பு…

சென்னை யானைக்கவுனி, மண்டலம். 5, வார்டு 54 பகுதி 13 ல், உட்வார்ப்பு, முதல் கேட்டில், 2020-2021 சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பொதுமக்களின் வசதிக்காக கட்டணமில்லா கழிவறையினை, துறைமுகம் தொகுதி தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான மாண்புமிகு திரு. P.K.சேகர்பாபு முன்னிலை வகிக்க, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதிமாறன் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. சுகன்தீப்சிங்பேடி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக கூவம் கரையினை ஒட்டி இரவு, பகலாக பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்றி வருகின்றனர். இதனையும் பார்வையிட்டு அவர்களது இந்த சிறப்பான பணிக்கு பாராட்டு தெரிவித்தார்கள் இந்த இடத்தில் பசுமையான மரங்களை நட்டு பராமரிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.


செய்தியும், படமும்:
K.மகேஷ்குமார்

Check Also

பழைய வண்ணாரப்பேட்டை காளியம்மன் திருக்கோயில் நவராத்திரி விழா…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள 96 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் நவராத்திரி …