போக்கோ ஹராம் தீவிரவாதிகள் 10 பேருக்கு மரண தண்டனை

போக்கோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகளுக்கு சாத் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

நைஜீரியா, நைஜர், சாத் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் போக்கோ ஹராம் அமைப்பினர் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை அவர்கள் கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சாத் நாட்டில் கைது செய்யப்பட்ட போக்கோ ஹராம் தீவிரவாதிகள் பத்து பேருக்கு ஜமினா நீதிமன்றம் மரணதண்டனை விதித்து உத்தரவிட்டது. இத்தீர்ப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …