போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்” முப்பெரும் விழா!

” போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்” முப்பெரும் விழா வருகின்ற 31.12.19 செவ்வாய்கிழமை காலை சரியாக 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.

பிபிஎஃப்ஏ மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் கெளரவ ஆசிரியருமான ” செயல் சிங்கம்” திரு.Ln C. பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்திட, மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் விழாவின் தொடக்கமாக சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளையும் கெளரவிக்க உள்ளார்.

மேலும் 11 மணியளவில், ” சிறப்பு பட்டி மன்றம்” நமது சென்னை மாவட்ட இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு. பூ. கார்த்திகேயன் தலைமையில் நடைபெறுகிறது.

தொடர்ந்து பிபிஎஃப்ஏ முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி திரு. லட்சுமி நாராயணன் அவர்களது புதல்வர் திரு L. சூர்யா அவர்களது ” கலக்கல் நடனமும், ” யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” சார்பில் கலைநிகழ்ச்சிளும் நடைபெறுகிறது.
பிற்பகல் 12 மணியளவில் சிறப்பு விருந்தினர்கள் உரையுடன், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

மதியம் 1.15 மணியளவில் வருகை தந்த அனைவருக்கும ” சிறப்பு விருந்து” வழங்கப்படுகிறது.

ஆகவே, நிகழ்ச்சி நடைபெறவுள்ள இராயபுரம், S.N.செட்டித் தெருவில் உள்ள “ஜெய மங்களம் திருமண மாளிகை”க்கு (ஐட்ரீம் சினிமாஸ் எதிரில்) வருகைத் தந்து, பிரமிப்பான விழாவாக அமைவதற்கு ஒத்துழைக்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

Check Also

ஊரட‌ங்கால் மக்கள் பசிப்பிணியை போக்கும் PPFA..

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக மதிய உணவினை தொடர்ந்து 13 …