மக்களுக்கான வழிகாட்டு மய்யம் துவக்க விழா…

சென்னை, திருவொற்றியூர், சன்னதி தெருவில் உள்ள டி.கே.பி. திருமண மாளிகையில் 29.09.2021 புதன்கிழமை மாலை 4 மணியளவில்,

  • மக்கள் நலப்பணி திட்டங்கள் பெறுவதற்கான வழிகாட்டு மய்யம்.
  • ஏழை எளிய மக்களுக்கான‌ இலவச சட்ட உதவி மய்யம்.
  • வீரத்தமிழர் சிலம்பாட்டம் மற்றும் கலை சங்கமம்.
  • இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு

இவற்றின் தொடக்கவிழா திரு. K. கணேசன் (முன்னாள் மத்திய ஊரக வளர்ச்சித்துறை மையத்தின் தமிழ்நாடு மாநில அமைப்புச் சாரா உறுப்பினர்) அவர்களது தலைமையில், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நீதியரசர். திரு. மு. ஜெயபால் அவர்கள் திருக்கரங்களால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளருமான “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் வடசென்னை மாவட்ட துணை செயலாளருமான ” கிங்மேக்கர்” திரு. Ln B செல்வம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வடசென்னை மேற்கு மாவட்டத்தின் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு. D. மகேந்திரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவொற்றியூர் தொகுதி தலைவர் திரு. கண்ணன் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

வீரவிளையாட்டு சிலம்பம் கலையை மத்திய அரசு விளையாட்டு துறையால் அங்கீகாரம் வழங்கிய பாரத பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திரமோடி அவர்களுக்கும், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிலம்பாட்டத்திற்கு இட ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” கே‌ சங்கர்

Check Also

மாடுகள் அடாவடி .. தடாலடியா நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி…?

சென்னை ஆவடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சி.டி.எச். சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்தப் பகுதியில் மருத்துவமனை, …