மக்கள் நலப்பணியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த அரசு அறிவித்துள்ள ஊரடங்கினால் பாதித்துள்ள மக்களின் பசிப்பிணியினை போக்கிடும் வண்ணம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் பல்வேறு உதவிகளை பல்வேறு கட்டமாக செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று 16-05-2020, சனிக்கிழமை மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் மக்களுக்காக இரவு, பகல் பாராது உழைத்து வருகின்ற சென்னை பெருநகர சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் மற்றும் குடிநீர் & கழிவு நீர் வாரிய ஊழியர்களுக்கு, அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள், முக கவசங்கள் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் திரு. வாசுதாசன், தென் சென்னை மாவட்ட துணை தலைவர் திரு. சேகர் ஆகியோரது ஏற்பாட்டில் வழங்கப்பட்டது‌.

“தனித்திரு”
“விழித்திரு”
“துரத்திடு “

நம் அனைவரது நலம் காப்போம்!
என்றும் மக்கள் நலப் பணியில்…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தமிழ்நாடு.

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …