மக்கள் மருத்துவர் பிறந்தநாள் விழா…

சென்னை,  பழைய வண்ணாரப்பேட்டையில் மக்கள் மருத்துவர் என்று சொன்னாலே சின்ன குழந்தை கூட மறைந்த மருத்துவர் ஜெயசந்திரன் அவர்களது பெயரை சொல்லும்.

25 வருடங்களுக்கு மேலாக மருத்துவம் சேவை புரிந்த இவரிடம் வரும் நோயாளிகள் இவர்க்கிட்ட வந்தா, நோயே பயப்படும் என்று சொல்லும் அளவுக்கு மக்களோடு ஒன்றினைந்து மனிதராய் வாழ்ந்த இவரது 74 ஆம் பிறந்தநாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் அவர் வாழ்ந்த பழைய வண்ணாரப்பேட்டை இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் திரு எம்.என்.ராஜா, வடசென்னை கிழக்கு மாவட்டத்தின் தலைவர் திரு. கிருஷ்ணகுமார், வடசென்னை கிழக்கு மாவட்டத்தின் பொதுச் செயலாளர் திரு. வன்னியராஜன், மருத்துவர் ஐயாவின் துணைவியார் டாக்டர் வேணி ஜெயச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில், மருத்துவர் ஐயா புதல்வி Dr சரண்யா பேசுகையில், நாங்கள் எங்கள் தந்தையின் பெருமை சொல்வதைவிட மக்களின் நம்பிக்கையினை எந்த அளவுக்கு காப்பாற்றி வந்தார் என்பதால் அவருக்கு பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்ய விரும்புகின்றோம் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் திரு. எம்.என்.ராஜா, ” நியாயமான கோரிக்கைக்கு தங்களால் ஆன உதவியினை கண்டிப்பா செய்து தருவோம் ” என உறுதியளித்தார்.

மருத்துவர் ஐயாவின் மீது பாசம் வைத்துள்ளவர்களின் கோரிக்கையாக விரைவில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த களத்தில் இறங்குவோம் என தெரிவித்துள்ளனர்.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:
கிங்மேக்கர்”
திரு. Ln B.செல்வம் M.A.,

 

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …