இராயபுரத்தில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு….

சென்னை, இராயபுரம், மன்னார்சாமி கோயில் தெருவில், 13.08.2021, வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், விருதுநகர் நாடார் சாரிடபுள் டிரஸ்ட் பிரதான் மந்திரி பாரதீய ஜன் ஒளஷதி கேந்திரா – மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு. K. அண்ணாமலை IPS., அவர்கள் மக்கள் மருந்தகத்தை தனது திருக்கரங்களால் திறந்து வைத்தார்.

முன்னதாக, அவருக்கு வடசென்னை(கி)மாவட்டம் சார்பில் பூரணகும்பத்துடன், மகளிரணியினர் ஆர்த்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. திறப்புவிழா பகுதிக்கு பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார்.

இந்நிகழ்வில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், மாநில பொதுச் செயலாளருமான திரு. கரு. நாகராஜன், வடசென்னை (கி) மாவட்ட தலைவர் திரு. M.கிருஷ்ணகுமார், வடசென்னை (கி) மாவட்ட பொதுச் செயலாளர் திரு. K.வன்னியராஜன், மத்திய மண்டலம் தலைவர் திரு. ரூப்சந்தர், கிழக்கு மண்டலம் தலைவர் திரு. ஏழுமலை, மேற்கு மண்டலம் தலைவர் திரு. பழனி, ஊடகபிரிவு மாவட்ட தலைவர் திரு. நவீன் மற்றும் இராயபுரம் மத்திய தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்” Ln.B.செல்வம்
வடசென்னை (கி) ஊடகபிரிவு செயலாளர்

Check Also

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஜமீன் நத்தம்பட்டியில் காமராஜர் அரங்கம் திறப்பு விழா!…

தனக்காக வாழாமல் மக்கள் நலனுக்காவே வாழ்ந்து மறைந்த பாரத பெருந்தலைவர் ஐயா கு. காமராஜர் அவர்களது பெயரில் நம் ஊர்லேயும் …


Notice: Undefined variable: visibility_homepage in /home/kmaafxvc/geniustv.in/wp-content/plugins/kn-mobile-sharebar/kn_mobile_sharebar.php on line 71