மக்கள் வெள்ளத்தில் திமுக கழக தலைவர்…

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் 173 தொகுதிகளில் களம் காண்கிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளியாய் சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து மக்களிடையே வாக்குகளை சேகரித்து வருகின்றார்.

அந்த வகையில் 22.03.2021 திங்கட்கிழமையன்று இரவு 9 மணியளவில், இராயபுரம் கிழக்கு மாதா கோவில் ரம்ஜான் மாளிகை அருகே பிரம்மாண்டமான மேடையில் வெற்றி வேட்பாளர்களான, துறைமுகம் – திரு. P.K. சேகர்பாபு, இராயபுரம் – திரு. “ஐட்ரீம்” R.மூர்த்தி, ஆர்.கே. நகர் – திரு. J.J.எபினேசர், திருவொற்றியூர் – திரு.K.P.P. சங்கர், பெரம்பூர் – திரு. R.D.சேகர், திரு. வி.க. நகர்‌- திரு. “தாயகம்” கவி, மாதவரம் – திரு. S. சுதர்சனம், எழும்பூர் ( தனி) திரு. ர. பரந்தாமன் ஆகியோரை அறிமுகப்படுத்தி, உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்: ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன்

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …