மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 40 பேர் படுகாயம்

கடலூர் அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஏறக்குறைய 40 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, “திருச்சி ரயில்வே சரகத்துக்கு உட்பட்ட பூவனூர் எனும் இடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை எழும்பூர் – மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 16859 வந்து கொண்டிருந்தது.

அப்போது ரயில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. 5 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 25 பெண்கள் உட்பட 40 பேர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை  விருத்தாச்சலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்தது சென்னை, திருச்சியில் இருந்து ரயில்வே அதிகாரிகள் விரைந்தனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ் குமார், கடலூர் எஸ்.பி. விஜயகுமார் ஆகியோரும் சென்றனர். அவர்கள் மேற்பார்வையில் மீட்புப் பணிகள் நடைபெற்றன.

கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறும்போது, “விபத்தில் காயமடைந்த பயணிகள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும். பயணிகள் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல விழுப்புரம், திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ரயில்வே உதவி எண்கள்:

விபத்து குறித்து தகவல் அறிய ரயில்வே உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருச்சி: 0431-2461241, 2410534

விருத்தாச்சலம்: 04143-263767

விழுப்புரம்: 04146-241936

சென்னை எழும்பூர்: 044-29015203

Check Also

ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி …