மணலி, மாத்தூரில் மக்கள் நலனுக்காக கபசுரக் குடிநீர்..

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, மணலி, மாத்தூர் பகுதி மக்கள் நலனுக்காக, கொரோனா எதிர்ப்பு சக்தியாக விளங்கிடும் “கபசுரக்குடிநீர்” (கசாயம்) மாத்தூர், எம்.எம்.டி.ஏ., 2 வது பிரதான சாலை E.B. அலுவலகம் அருகில் , 24.06.2020, புதன்கிழமை காலை 8 மணியளவில், திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு. S. இதாயத்துல்லா தலைமையில் பகுதி வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நமது சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அவர்கள் அறிமுகம் செய்த ” எலைட் வெட்டிவேர் முககவசம்” அறிமுகப் படுத்தப்பட்டது.

அவ்வமயம் மாநில கண்காணிப்பு குழு தலைவர் திரு. P.K. மோகனசுந்தரம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் திரு. R.சத்யநாராயணன், மாநில செயற்குழு உறுப்பினர் S.M.பாஷா, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு A. செய்யது சுலைமான் மற்றும் நாஜிர், நூருல் அமின், ஜமில், மஹாபூப்அலி, ஆட்டோ அமின் சுரேஷ் சத்தியநாராயணன், நிஜாம் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

என்றும் நட்புடன்…
” ஜீனியஸ்” K.சங்கர்
தலைமை நிலைய செயலாளர்,
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்,
தமிழ்நாடு.

Check Also

PPFA சார்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது…

PPFA சார்பாக ஊரடங்கில் தொடர்ந்து மக்கள் பசிப்பிணியினை போக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு …