மதுரையில் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா? சிவகார்த்திகேயன் விளக்கம்

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், ஹன்சிகா ஆகியோர் கலந்துகொண்டார்கள். மதுரைக்கு வருகிறபோது கமலும் சிவகார்த்திகேயனும் ஒரே விமானத்தில் வந்தார்கள்.

மதுரை விமான நிலையத்திலிருந்து சிவகார்த்திகேயன் வெளியே வந்தபோது கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார்கள். ரஜினிமுருகன் படத்தில் நடித்ததற்காக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கோஷம் எழுப்பியவாறு சிவகார்த்திகேயனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலர்களின் உதவியுடன் அவர், காரில் ஏறி அங்கிருந்து கிளம்பினார். இதனால் கமல் ரசிகர்களால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தன.

இதுகுறித்து கமல், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் நேற்று பேட்டியளித்தார்கள். ‘மதுரையில் என்னுடைய ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியதாக கூறப்படுவது தவறு. நானும், சிவகார்த்திகேயனும் ஒன்றாகத்தான் விமானத்தில் வந்தோம். அவர் தாக்கப்பட்டவில்லை’ என்றார் கமல். ‘எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, நான் நலமாக இருக்கிறேன்’ என்றார் சிவகார்த்திகேயன்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘உங்கள் ஆசியினால் நான் நலமுடன் உள்ளேன். இந்தத் தருணத்தில் ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. உங்கள் அன்பு எனக்கு வலு சேர்க்கிறது‘ என்று குறிப்பிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …