மலேசியன் ஏர்லைன்ஸ் – ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் முதல் தேடலில் எந்த தகவலும் இல்லை

இந்துமகா சமுத்திரத்தில் தனது முதல் தேடல் நடவடிக்கையின் போது, சிறிய ஆளில்லா நீர்மூழ்கியால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் குறித்த எந்த விதமான தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அமெரிக்க கடற்படையின் காப்டன் ஒருவர்  கூறியுள்ளார்.

தானாகவே இயங்கக் கூடிய அந்த ரோபோ நீர்மூழ்கி, தான் அதிகபட்சம் செல்லக் கூடிய ஆழத்துக்கு செல்வதற்கு முன்னதாக, கடலின் அடித்தளம் குறித்து பல மணிநேரம் தகவல்களை சேகரிக்கக் கூடியதாக இருந்தது. அதன் பின்னர் அது நீரின் மேற்பரப்புக்கு வந்தது. அந்த சிறிய நீர்மூழ்கி மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்படும்.

ஆஸ்திரேலியாவுக்கு மேற்கே கடந்த வாரம் கண்டறியப்பட்ட சிக்னல்கள்அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்துதான் வந்தனவா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *