மாடுகள் அடாவடி .. தடாலடியா நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி…?

சென்னை ஆவடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சி.டி.எச். சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்தப் பகுதியில் மருத்துவமனை, திருமண மண்டபம், குடிமகனின் ஆதாரமாக விளங்கும் டாஸ்மாக் இருப்பதால் பொதுமக்கள் அதிமாக வந்து செல்லும் இடமாக இருக்கிறது.

ம‌க்க‌ள் அ‌திக‌ம் கூடு‌ம் அம்பேத்கர் சிலையருகில் காலை, மாலை, இரவு என்று பாராமல் மாடுகள் உலாவருவதும், சாலை ஓரங்களில் அமர்ந்திருப்பதும் பல நேரங்களில் வாகன ஓட்டிகளை நிலை தடுமாறவும் செய்து வருகிறது. இதனால் ஏற்படும் நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு, விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பகுதி மக்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதனை சீர்படுத்த வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள், மாடுகளின் உரிமையாளர்களை கண்டிக்கவில்லை இதனால்
24 மணிநேரமும் இந்த சாலையில் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் நிலையில், இதற்கான ஒரு நிரந்தர தீர்வை காண மக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் இதனை கண்டும் காணாமல் இருப்பது தான் புரியாத புதிர்.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:
S. பாக்கியராஜ்

Check Also

டாஸ்மாக்கை மூடக்கோரி பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்…

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில், மதுபான கடைகள் திறக்க அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, பாரதிய ‌ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் …