மின்சார ரெயில்கள் ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் இன்று 8 ரெயில்களும், நாளை 58 மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு இன்று இரவு 10 மணி, 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து 10.50 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து ஆவடிக்கு இரவு 10.20, 11.45 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மூர்மார்கெட்டிலிருந்து பட்டாபிராமுக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

Check Also

எகிறிடும் வணிக சிலிண்டரின் விலை

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101.50 புதன்கிழமை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.1,898-க்கு …