மீண்டும் விரட்டப்பட்டார் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

தேனி தொகுதியில் பிரசாரத்திற்குப போன இடத்தில் சீலையம்பட்டி என்ற இடத்தில் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் பன்னீர் செல்வத்தை சூழ்ந்து கொண்டு கடந்த தேர்தலின்போது உறுதியளித்த பசுமை வீடு திட்டம் என்னவாயிற்று, எங்களுக்கு ஏன் வீடு கட்டித் தரவில்லை என்று கேட்டு எதிர்ப்பு குரல் கொடுக்கவே தேர்தல் பிரச்சாரத்தை தொடரமுடியாமல் சென்றுவிட்டார் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.

இதுப்பற்றி அந்த பெண்கள் கூறும்போது,

பசுமை வீட்டு கட்டித்தருவதாக கூறி ஏறக்குறைய ரூ.50 ஆயிரம் வரை வசூலித்தனர். இதுவரை வீடுகள் கட்டித்தரவில்லை. எங்களை அதிமுகவினர் ஏமாற்றி விட்டனர். எனவே, வரும் தேர்தலில் எங்கள் கிராமத்தை சேர்ந்த யாரும் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறினர்.

ஏற்கனவே போடிநாயக்கனூர் அருகே கரட்டுப்பட்டி என்ற கிராமத்திலும் பன்னீர் செல்வத்தை ஊருக்குள் நுழைய விடாமல் மக்கள் போராட்டம் நடத்தியுளளனர். தற்போது சீலையம்பட்டியிலும் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

One comment

  1. The chance not come back ple use gently don’t get money from the political party select a correct person to the national. JAI HIND

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *