முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: முதலமைச்சர் ஜெயலலிதா

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் கோடி முதலீடுகள் பெற இலக்காக கொண்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ந்தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள் கலந்துக்கொண்டனர்.

ஆனால், இலக்கை விட இரண்டு மடங்கு முதலீடு குவிந்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தனது நிறைவு உரையில் குறிப்பிட்டார்.

இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி என்று கூறிய முதலமைச்சர்,  முதலீட்டாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Jayalalithaa-l-pti

முதலீடு விவரம்

  • மொத்த முதலீடு: ரூ. 2,42,160 கோடி
  • உற்பத்தி துறை: ரூ. 1,04,286 கோடி
  • மின்சக்தி துறை: ரூ.1,07,136 கோடி
  • தகவல் தொழில்நுட்பம்: ரூ.10,950 கோடி
  • துணித்துறை: ரூ. 1,955 கோடி
  • வேளாண் துறை: ரூ.800 கோடி
  • மீன் துறை: ரூ.500 கோடி 
  • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் ரூ.16,533 கோடி முதலீடு

கடந்த 2012 ஆம் ஆண்டு போடப்பட்ட சூரிய மின் சக்தி கொள்கைப்படி, சூரிய சக்தி மூலம் மின்சார உற்பத்திக்கான ரூ.35,356 கோடி முதலீட்டுக்கு இந்த மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களின் நிறைவுப் பேருரை10-09-2015

2014-2015 ஆம் ஆண்டு நிதி நிலைஅறிக்கை உரையின்போதே தமிழ்நாடு அரசு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு மார்ச் 2014-இல் நடைபெறும் என அறிவித்தது. இந்த சந்திப்பு மிகுந்த திட்டத்துடன் மிக கவனமாக நானே அனைத்துக் கூறுகளையும் ஆய்ந்தேன்.  இம்மாநாடு தொடர்பாக பல்வேறு முதலீட்டாளர்கள் சந்திப்புக்கள், மாநாட்டின் சிறப்புக் கூறுகள் அடங்கிய பதாகைகள், சந்திப்புக்கள், 11 வெளிநாடுகளிலும் மற்றும் இந்தியாவில் 16 மாநகங்களிலும் நடைபெற்றது. இந்த மாநாட்டின் வெற்றிக்காக, 9 நாடுகள் 23 கூட்டமைப்பு நாடுகளின் நிறுவனங்கள் இணைந்து செயலாற்றின. நேற்றும், இன்றும் நடந்த இந்த சந்திப்பு இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் மிக பலன் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.

மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் தெரிவிக்க விரும்புவது என்னவெனில், எனது தலைமையிலான அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டு மாநிலத்திற்கு சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பு மூலமாக மாபெரும் முதலீடாக ரூ.2,42,160 கோடி பெறப்பட்டுள்ளது. இந்த முதலீடு நிர்ணயித்த இலக்கை விட இரண்டரை மடங்காகும். 1991 – 2011 காலகட்டத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் தாண்டி இந்த முதலீடு, தமிழ்நாட்டின் அதிகப்படியான ஒட்டுமொத்த முதலீடு ஆகும். இன்று மட்டுமே மொத்தம் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு அரசுக்கும் நிறுவனங்களுக்கும் பரிமாறப்பட்டுள்ளது.

ரூ.1,04,286 கோடி உற்பத்தி தொழிலகங்களுக்கும், ரூ.1,07,136 கோடி எரிசக்தி சார்ந்த தொழிலகங்களுக்கும், ரூ.10,950 கோடி தகவல் தொழில்நுட்பத் திறம் சார்ந்த தொழிலகங்களுக்கும், ரூ.1,955 கோடி கைத்தறி மற்றும் ஆடைஉற்பத்திக்கும், ரூ.800 கோடி வேளாண் சார்ந்த தொழில்களுக்கும், ரூ.500 கோடி மீன்வளம் சார்ந்த தொழில் முதலீடுகளுக்கும் என ஒட்டுமொத்தமாகப் ரூ.2,42,160 கோடிகளுக்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.

எனது தலைமையிலான அரசின் 2012 ஆம் ஆண்டு அறிவிப்பின் மூலம், சூரியஒளி மின்னாற்றல் திட்டக் கொள்கையின் நேரடி விளைவாக இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பின் வாயிலாக, 5,345 மெகாவாட் சூரியஒளி மின்னாற்றல் திட்டங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 35,356 கோடி ரூபாய்க்கு செய்யப்படவுள்ளன. 10000 க்கும் மேலான குறு, சிறு தொழிற்சாலைகள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 16,553 கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்படவுள்ளன.

எனது தலைமையிலான அரசு, நடுநிலைமையான தொழில் வளர்ச்சிக் கோட்பாடு மாநிலமெங்கும் நடைபெறவேண்டும் என விரும்புகிறது. ஆகவே, அதன் மூலமாக, மிகச் சிறந்த சலுகைகள் கொண்ட திட்டங்களை தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்கு வழங்க விரும்பியது. அதனடிப்படையில் கட்டுமானத்துறைக்கு மட்டுமே சிறந்த பலனாக, ரூ.1,04,286 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலமாக தென்மாவட்டங்களுக்கு மட்டுமே 50%-க்கு மேல் முதலீடுகள் கிடைக்கப்பெறும். எனது தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையால், ஒப்புதல் அளிக்கப்பட்ட, அற்புதமான நீண்டகால சிறப்புப்பெற்ற மதுரை, தூத்துக்குடி தொழில்பூங்கா திட்டத்திற்கு பெருமளவிலான முதலீட்டு வாய்ப்புகள் இன்றைக்கு ஏற்பட்டுள்ளன.

இன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்றான, தூத்துக்குடியில் இயற்கைவாயு (LNG) முனையம் தொடங்கக்கூடிய தருவாயில் உள்ளது. இந்தத் திட்டம் மற்றும் எண்ணூரில் தொடங்க அறிவிக்கப்பட்ட நீண்டகால எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதுடன், உற்பத்தித் துறையில் போட்டித் தன்மையினை மேம்படுத்துகிறது.

ஏற்கனவே, தமிழ்நாடு உலகத்தின் சிறந்த 10 ஆட்டோமொபைல் உற்பத்தி மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்போது, சென்னை ஓர் ஆண்டிற்கு 1.4 மில்லியன் கார்களை உற்பத்தி செய்யும் தனித்திறனைக் கொண்டுள்ளது. அதாவது, ஒரு நிமிடத்திற்கு 3 கார்கள் சென்னையிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது.

இன்று ஆட்டோமொபைல் சார்ந்த பெருநிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டதனால், உலகிலேயே சென்னை மிகப்பெரிய கார் உற்பத்தி மையமாக மாறும். உலகிலேயே தமிழ்நாட்டை உற்பத்தித் துறையில் முதன்மையாகவும், தலைமையிடமாகவும் மாற்றுவது எனது இலட்சியமாகும்.

தமிழ்நாட்டு மக்கள் மீதும், எனது தலைமையிலான அரசின் மீதும், அதன் கொள்கைகள்மீதும், பெருநம்பிக்கை வைத்து, தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்ய முன்வந்துள்ள மற்றும் முதலீடு செய்துள்ள அனைத்து முதலீட்டாளர்களுக்கும், எனது உளமார்ந்த நன்றினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு முழுபலன் கிடைக்கும் என நான் உறுதியளிக்கிறேன். அறிவுப்பூர்வமான முதலீடு செய்யும் இடத்தினை நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள். தமிழ்நாட்டில் நீங்கள் செய்த முதலீடுகள் பாதுகாப்பாகவும், இருதரப்புக்கும் நன்னம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்.

இன்று, இங்கு இறுதிசெய்யப்பட்ட ஒவ்வொரு முதலீட்டிற்கும், தேவையான ஆவணங்களுடன், ஒற்றைச்சாளர ஒப்புதல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டுக்கான விண்ணப்பங்களோடு தகுந்த ஆவணங்களையும் வழங்கிய நாளிலிருந்து, 30 நாட்களுக்குள் ஒப்புதல்கள் வழங்கப்படும் என நான் உறுதி கூறுகிறேன். ஒவ்வொரு திட்டத்திற்கும், மாநில அரசின் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை ஒருங்கிணைப்பாளராக எனது தலைமையிலான அரசு நியமித்துள்ளது. மேலும் 30 நாட்களுக்குள் ஒப்புதல்கள் வழங்குவதற்காக, அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளையும், முதலீட்டாளர்களுடன் கலந்து ஆலோசித்து அதிகாரிகளால் நல்கப்படும்.

தமிழ்நாட்டில் சட்டப்பூர்வமான நெறிமுறைப்படுத்தப்பட்ட ஒப்புதல் வழங்குமுறை நடைமுறையில் உள்ளது. பெரும்பாலானவை இணையவழியாகவே செயற்படும். இருப்பினும், சில ஒப்புதல் செயல்முறைகள் இணையவழியாக ஆக்கப்படவில்லை. அனைத்துச் சட்டரீதியான செயல்முறைகளும் முன்திட்ட ஒப்புதல்கள் வழங்கு முறைகளும் மிக விரைவில் வழங்கப்படும் என்றும் இதன்மூலம் தொகுக்கப்பட்ட அனைத்து வணிகக் குறியீடுகளின் உச்சமாகத் தமிழ்நாடு திகழும் என்றும் எனது தலைமையிலான அரசு உறுதிகூறுகிறது. இந்தியாவின் விருப்பத்துக்கு உகந்த முதல் முதலீட்டு இலக்காகவும், ஆசியாவின் தலைசிறந்த மூன்று முதலீட்டு இலக்குகளில் ஒன்றாகவும் தமிழ்நாடு திகழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். அந்த நிலையை அடையவும் தக்கவைக்கவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் எனது தலைமையிலான அரசு மேற்கொள்ளும் என்பதையும் உறுதிசெய்கிறோம்.

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் வெற்றியடைய, பங்களித்த கூட்டு நாடுகளையும் வணிக மேம்பாட்டு நிறுவனங்களையும் நான் உளமாரப் பாராட்டுகிறேன். சென்னையில் இருக்கும் துணைத்தூதரக அதிகாரிகள், புது தில்லியிலுள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் இந்திய தூதுரகங்கள் இன்றியமையாத ஒத்துழைப்பை நல்கியுள்ளன. அவை தமிழ்நாட்டில் நிலவும் முதலீட்டு வாய்ப்புகளை மிகச்சிறப்பான முறையில் வெளிநாடுகளுக்குத் தெரியபடுத்தியுள்ளன. குறிப்பாக, இம்மாநாட்டில் பங்குபெறுவதற்காக தொலைதூரப் பயணங்கள் மேற்கொண்டு வருகை புரிந்திருக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளால், இந்தச்சந்திப்பு சிறப்பெய்தியுள்ளது.

தமிழ்நாட்டையும் அதன் முதலீட்டுச் சூழலையும் புரிந்துகொள்வதற்காக இம்மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் அனைவரும், தமிழ்நாடு ‘முதலீட்டாளர்களின் சொர்க்கம்’ என்பதை உளமார ஏற்றுக் கொண்டிருப்பது எனக்கு நம்பிக்கையளிக்கிறது. இன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் மிகப்பெரிய முதலீட்டு ஒப்பந்தங்கள் உங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம் அளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. முதலீட்டுக்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கின்றன. எனவே தமிழ்நாட்டில் முதலீடு செய்து, எங்களது வளர்ச்சி வரலாற்றில் இணைந்து கொள்ள உங்களை மீண்டும் வரவேற்கிறேன். இந்நிகழ்ச்சி உங்களது முதலீட்டுத் திட்டங்களை விரைவில் உறுதிசெய்ய ஊக்குவித்துள்ளது என நம்புகிறேன்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பெரும் வெற்றியாக்கித் தந்த, எனது அமைச்சரவையின் அமைச்சர்களையும், மாநில அரசு அதிகாரிகளையும், வர்த்தக மற்றும் தொழில்துறையின் பல்வேறு அமைப்புக்களையும் நான் பாராட்டுகிறேன். நமக்கு முன்னே இருப்பதை நாம் மறக்கக் கூடாது. வாக்குறுதிகளைக் காப்பாற்றவும், உத்தரவாதங்களை செயல்முறைபடுத்தவும், ஒப்புதல்களை நிறைவேற்றவும் நாம் கடமைபட்டுள்ளோம். எனது தலைமையிலான அரசு கடந்தகால சாதனைகளை நினைத்து ஓய்ந்திருக்காமல், உயரிய இலக்குகளை அடைய தொடர்ந்து கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, மரபார்ந்த துறைகளான கைத்தறி ஆடைத் தொழிலகங்களுக்கும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார் சேவைகள், மின்னணு வன்பொருள் உற்பத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு சார்ந்த தளவாடங்கள் உற்பத்தி ஆகியவற்றிலும், நடைமுறைக்கேற்ற தொலைநோக்குக் கொள்கைகளை எனது தலைமையிலான அரசு விரைவில் நடைமுறைப்படுத்தும்.

சென்னையில் நடைபெற்ற, முதல் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றிப்பெற்றுள்ளது. செயலூக்கத்தை நீடிக்கவும், அமைப்புகளை பலப்படுத்தவும் வேண்டிய முக்கியத்துவத்தை இம்மாநாடு மூலம் உருவாகியுள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். இவற்றை செயல்படுத்த, இதைப் போன்ற மாநாடுகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை நடத்துவது அவசியமாகும். இனி, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை, தமிழ்நாட்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்கும் என நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த மாநாடு 2017 ஆம் ஆண்டு நடைபெறும்.

முதலீடுகள், அவரவர்களின் சொந்த நன்மைக்காக செய்யப் படுவதில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முதலீட்டாளர்கள், தங்களுக்கு நேரடிப் பலன்கள் வரும் என எதிர்பார்ப்பது அவர்களின் கடமையாகும். அதுவே பொருள் வாய்ந்ததாகவும், செய்யும் பணிகளில் நிறைவு தருவதாக அமைய வேண்டும். உயர் வருவாயும் மற்றும் சிறந்த தரப்படுத்தப்பட்ட வாழ்வுமுறை வளர்ச்சியுமே எய்துகின்ற வளத்தில், பொருட்கள் மற்றும் சேவைச் சந்தையில் பலமான வளர்ச்சியை ஏற்படுத்தி, மதிப்புக் கூட்டு உற்பத்திக்கு உயர்தரமான மனித வளத்தினைத் தந்து, முதலீட்டாளர் உட்பட அனைவருக்கும் பலன் அளிக்கக்கூடியதாகும். இந்த அறம் சார்ந்த இந்த விழுமியத்தின் மூலம் தமிழ்நாட்டை மென்மேலும் வளர்த்தெடுப்பது நமது நோக்கமாகும். இந்த உன்னதமான முயற்சியினால்,  நீங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு இன்று, சிறந்த முதலீடுகளை செய்ய வந்திருப்பது வரவேற்கத்தக்கது. தலைசிறந்த தமிழ்நாட்டையும், இந்தியத் திருநாட்டினையும் சிறந்த வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் பாதை அமைத் நடைமுறைப் படுத்தி வழிநடத்துவோம்.

 

Check Also

ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி …