முதல்வர் தலைமையில் நாளை தொடங்குகிறது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு

தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில்  நாளை சென்னையில் தொடங்குகிறது.

இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பொன். ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நாளையும் நாளை மறுநாளும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 25 கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்திறகு, ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் வர வாய்ப்பிருப்பதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாநாட்டின்போது கையெழுத்தாகும் என தெரிகிறது.

Check Also

அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்ய, அண்ணா பிறந்த நாளில் சூளுரை ஏற்க வேண்டும்:ஜெயலலிதா

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். …