மும்பையில் மட்டும் 15 லட்சம் பேர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்

மும்பையில் மட்டும் 15 லட்சம் வாக்காளர்கள்  பட்டியலில்  இருந்து நீக்கப்பட்டு இருப்பதால் வாக்காளர்கள் மத்தியில் கடும்  கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் 60 லட்சம் பேரின்  பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாகவும் அதோடு அனைத்து தொகுதியிலும்  மறுதேர்தல் நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

மும்பையில் நேற்று முன்தினம் நடந்த  மக்களவை தேர்தலில் அதிகப்படியான வாக்காளர்களின் பெயர்கள்  விடுபட்டு போய் இருந்தது. அதாவது மும்பையில் உள்ள மொத்த  வாக்காளர்களில் 15 சதவீதம் பேர் அதாவது 15 லட்சம் பெயர்கள்  பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது.

இதனால் பல  வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து  தேர்தல் அதிகாரிகளுடன் சண்டையிட்டனர். [pullquote]போரிவலியில் மட்டும் 50  ஆயிரம் பெயர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டு இருந்தது. [/pullquote]

தேர்தல் கமிஷன் மன்னிப்பு கேட்டது:

மும்பையில் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தவர்களில்  பிரபலமானவர்களும் இருந்தனர். எச்.டி.எப்.சி. வங்கி தலைவர் தீபக்  பாரேக், பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, சில  பாலிவுட் பிரபலங்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இல்லை.

இதற்கு தேர்தல் கமிஷன் செய்த தவறுகள்தான் காரணம் என்று மாநில  தலைமை தேர்தல் அதிகாரி எச்.எஸ்.பிரம்மா ஒப்புக் கொண்டு மன்னிப்பு  கோரியிருக்கிறார். இது தொடர்பாக நேற்று அவர் கூறுகையில்,  ‘‘தேர்தல் கமிஷன் தரப்பில் ஏற்பட்ட தவறுகளே பலரின் பெயர்கள்  வாக்காளர் பட்டியிலில் விடுபட்டு போனதற்கு காரணம் என்பதை ஒப்புக்  கொள்கிறேன்.

தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போன வாக்காளர்களிடம் இதற்காக  மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு வாக்காளரின் பெயரும்  பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டியது எங்கள்  பொறுப்பு. அதை நாங்கள் செய்ய தவறிவிட்டோம்.  விரைவில் இந்த  தவறு சரி செய்யப்படும்’’ என்றார். [pullquote]இதே போன்று புனேயிலும் ஒரு  லட்சம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதது  குறிப்பிடத்தக்கது.[/pullquote]

மும்பை முழுவதும் மொத்தம் 15 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில்  இருந்து நீக்கப்பட்டு இருப்பதால் இது திட்டமிட்ட  செயல் என்று சிலர்  கூறுகின்றனர். இதற்கிடையே மாநிலம் முழுவதும் 60 லட்சம் பேரின்  பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதால் அனைத்து  தொகுதியிலும் மறு தேர்தல் நடத்தவேண்டும் என்று விதர்பா ஜன்  அந்தோலன் சமிதி கிஷோர் திவாரி கோரிக்கை விடுத்துள்ளார். இது  தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘மகாராஷ்டிராவில்  வாக்காளர் பட்டியலில் 60 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டதற்காக  மன்னிப்பு கேட்டுக்கொண்டால் மட்டும் போதாது. அனைத்து  தொகுதியிலும் மறுவாக்கு பதிவு நடத்தவேண்டும் என கூறியுள்ளார்.

Check Also

எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அதிரடி.. மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு‌.‌..

சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வெங்கடேச கிராமிணி தெருவில் இயங்கி வந்த டாஸ்மாக் மூலம் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர்‌. இந்நிலையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *