மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் பெயர் சூட்ட முதல்வருக்கு மனு….

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில  தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும்,  ஜீனியஸ் டீவி தலைவருமான   “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் ம‌ற்று‌ம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ்  டீவி கெளரவ ஆசிரியருமான  “செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் அவர்கள்,  ஆகியோரது வழிக்காட்டுதலின்படி வடசென்னை தியாகராயர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மறைந்த மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன் அவர்களது பெயரை சூட்ட வேண்டும் என்கிற கோரிக்கை மனுவினை இன்று (15.02.2021, திங்கட்கிழமை) சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் முகாமை அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம்,  நமது சங்கம் மற்றும் பத்திரிகை சார்பாக அதற்கான மனுவினை சமர்ப்பிக்க முடிவு செய்தனர்.

போலீஸ் பப்ளிக் பிரண்டஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியருமான “கிங்மேக்கர்” திரு. Ln B. செல்வம் M.A.,அவர்கள் ம‌ற்று‌ம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தலைமை நிலைய செயலாளரும், ஜீனியஸ்  ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான ” ஜீனியஸ்” K. சங்கர் ஆகியோர் நேரில் சமர்ப்பித்தனர். முதல்வர் அலுவலகம் இதற்கான உ‌ரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K.சங்கர்

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …