மெட்ரோ வில் ஜீனியஸ் டீம்…

சென்னை விம்கோ நகர்- வண்ணாராப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் இன்று பாரத பிரதமரால் துவக்கப்பட்டுள்ளது. இத் தடத்தில் 9 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது.இன்று மட்டும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இலவச பயணத்திற்கு மக்களை அனுமதியளித்தனர். இதனால் மக்கள் வெள்ளத்தில் மெட்ரோ ரெயில்களில் அலைமோத, நம் பங்கிற்கு நாமும் இதில் பயணிக்க புதிய அனுபவத்தினை பெற்றது நிஜம்.

இருப்பினும் தேர்தல் வர இருப்பதாலும் இத் தடத்தினை திறப்பதால் ஆளும் தரப்பிற்கு மக்களிடடையே நற்பெயர் கிடைக்க வேண்டும் என்பதாலேயே இந்த வழித்தடம் துவக்கப்பட்டுள்ளது. அதுவும் மத்திய ஆளுங் கூட்டணியில் சேர இருப்பதால் பிரதமரை வைத்து திறப்பு விழா நடத்தினால் தங்களுக்கு நற்பெயர் கிடைத்திடும் என்பதை கருத்தில் கொண்டே அழுத்தம் கொடுத்து இந்த தடத்தை ஓட விட்டுள்ளனர். ஆனாலும் இத் தடத்தில் இன்னும் சில ரயில் நிலையங்கள் முழுமை பெறவில்லை என்பதும் இதனை பயன்படுத்திடும் மக்கள் விழிப்புடன் செல்வதற்கு இன்னும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பது தான் நம் பயணம் உணர்த்தியது.

செய்தி, படங்கள்
Ln L. வேலாயுதம்

Check Also

ஆசிரியர் தினம் – பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லி மானக்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் …