மேஜர் முகுந்த் உடல் சென்னையில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜன் உடல், சென்னை, பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் 42 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளைத் தேடும் பணியில் மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இரு ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்களும் 3 தீவிரவாதிகளும் இறந்தனர்.

இதில், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜனும் வீர மரணமடைந்ததில் ஒருவர்.

மேஜர் முகுந்த் உடல் ஞாயிற்றுக்கிழமை காலை காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. டெல்லியில் இருந்து இரவு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நள்ளிரவில் வந்து அடைந்தது. அங்கிருந்து ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், இன்று ராணுவ மருத்துவமனையில் இருந்து காலையில் அவரது பெற்றோர் குடியிருக்கும் கிழக்கு தாம்பரத்தில் உள்ள புரொபஸர்ஸ் காலனிக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.

பின்னர், பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, முழு ராணுவ மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் மேஜர் முகுந்த் உடல் தகனம் செய்யப்பட்டது.

முகுந்த் வரதராஜனின் மனைவி பெயர் இந்து. இந்து, பெங்களூரில் ராணுவ அதிகாரிகளின் குடியிருப்பில் வசித்து வந்தார். அங்கிருந்து தற்போது சென்னை வந்து சேர்ந்துள்ளார். அவர்களுக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது.

Check Also

மேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன்!

அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இயக்கிய ‘ஜெய்ஹிந்த்’ என்ற மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஜெய்ஹிந்த் …

Leave a Reply

Your email address will not be published.