“யாதும் ஊரே யாவரும் கேளீர் அறக்கட்டளை” சார்பில் இணையதளம் அறிமுகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” அறக்கட்டளை சார்பில் இணையதளம் அறிமுகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா இதன் நிறுவனர் பூ. கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட “போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்” மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு.MJF Dr Ln லி. பரமேஸ்வரன் அவர்கள் பெயர் பலகையையும், இணையதளத்தையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் அவர்களின் சேவைகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இதன் தலைவர், இந்த அமைப்பு முழுக்க முழுக்க ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும், இன்றைய இளைஞர்களின் திறமைகளை உலகறிய செய்திடும் அமைப்பாகவும் செயல்படும் என்றார். மேலும் நமது ஒவ்வொரு நிகழ்வுக்கும் திரு.MJF Dr Ln லி. பரமேஸ்வரன் அவர்கள் பக்கபலமாக இருந்து ஊக்குவித்து வருவதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஔிப்பதிவு, செய்தியாக்கம்

கே. சங்கர், அமுரா

Check Also

தமிழ்நாடு பத்திரிகையாளள் சங்கத்தின் சார்பில் 72 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழா…

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் சார்பில், சென்னை தலைமை அலுவலகத்தில் 26.01.2021 செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில் தேசிய …