“யாயா” அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான கோடை கொண்டாட்டம்

“யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கோடை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 01-05-19 காலை பத்து மணியளவில் இராயபுரம், ஜெயமங்களம் திருமண மாளிகையில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவிய போட்டி துவக்க விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் “யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” தலைவர் பூ .கார்த்திகேயன் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக PPFA மாநில தலைவர் திரு. MJF Ln Dr லி பரமேஸ்வரன், PPFA முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி B. லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இந் நிகழச்சி பற்றி கார்த்திகேயன் கூறுகையில், 3 ஆம் கோடை கொண்டாட்ட விழாவில் நமது பகுதி வாழ் மாணவர்கள் திறமையினை வெளிக் கொண்டு வரவேண்டும் என்கிற முயற்சிக்கு முழு ஒத்துழைப்பினை தரும் பரமேஸ்வரன் அண்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து சதுரங்ம், கேரம், பேச்சுப் போட்டியின் மூலம் மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து இம் மாத இறுதியில் பரிசளிப்பு விழா, கலை நிகழ்ச்சிகளோடு இராயபுரம் மார்க்கெட் சந்தில் திறந்த வெளி அரங்கில் நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.

“ஜீனியஸ்” சங்கர்

Check Also

வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….

சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை …