ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது என்பதே எனது கருத்து என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

பாஜகவினரும், காங்கிரஸில் இருந்து சமீபத்தில் வெளியேறிய ஜி.கே. வாசனும் ரஜினிகாந்தின் ஆதரவை எதிர்பார்த்து அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் இந்த கருத்தை இளங்கோவன் கூறியுள்ளார்.

rajnikanthhbigசென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வரக் கூடாது. இது தான் என் கருத்து. அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை தமிழகத்தில் ஏராளமான மக்கள் மதிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் உள்ள எந்த குடிமகனாக இருந்தாலும் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை இருந்தால் அது ரஜினி யாக இருந்தாலும் சரி காங்கிரஸில் இணைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மதச்சார்பின்மை மீது நம்பிக்கைக் கொண்ட யாருக்கும் காங்கிரஸின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று கூறினார்.

Check Also

காங்கிரஸ் கட்சியின் OBC துறை சார்பாக ஊரட‌ங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

கொரோனா பரவாமல் தடுக்க அமல்படுத்தபட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *