ராகுல், அன்னா ஹசாரேவைத் தொடர்ந்து மோடியை சந்திக்கிறாரா நடிகர் விஜய்?

லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மோடியை நடிகர் விஜய் சந்திக்க இருக்கிறார்.  இந்த சந்திப்பு கோவையில் வைத்து நடைபெறும் எனத்தெரிகிறது.

இது தொடர்பாக @Vijay_cjv ட்விட்டர் பக்கத்தில் அரசியல் சார்பு அல்லாத சந்திப்புக்காக நரேந்திர மோடி எனக்கு அழைப்பு விடுத்துள்ளதில் மகிழ்ச்சி. என்று ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

“Indeed privileged to be invited to a non-political meeting with Narendra Modi ji, looking forward to meet him..”

கடந்த ஆண்டு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும், சில மாதங்களுக்கு முன் அன்னா ஹசாரேவை, அவர் உண்ணாவிரதம் இருந்த மேடையிலேயே வைத்தும் சந்தித்தார் விஜய்.

இந் நிலையில் இப்போது மோடியை சந்திக்கிறார் விஜய். எது உண்மையோ?

Check Also

பிஞ்சு சுஜித் மறைவுக்கு அஞ்சலி…

திருச்சி மணப்பாறை அருகே நடுநாயக்கன்பட்டியில் கடந்த 25.10.19 அன்று மாலை 5.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *